அரைத்துவிட்ட சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 100 கிராம்
வரமிளகாய் - 6
மல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கத்தரிக்காய் - 100 கிராம்
முருங்கைக்காய் - 1
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 3
சின்னவெங்காயம் - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
செய்முறை:
குக்கரில் துவரம் பருப்பை வேகவைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி பொடியாக நறுக்கிய காய்கறி, வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு போட்டு வேகவிடவும்.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வரமிளகாய், சீரகம், மல்லி, கடலைப்பருப்பு, மிளகு, அரை தேக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை வறுத்து அரைத்து கொள்ளவும்.
இதனை புளித்தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும். காய்கள் நன்கு வெந்தவுடன் வேகவைத்த பருப்பை ஊற்றவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.