அரச்சி விட்ட சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்

நறுக்கிய வெங்காயம் - 1 கப்

தக்காளி - 1

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி

மிளகாய் வத்தல் - 5

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மஞ்சள் பொடி போட்டு நன்றாக வதக்கவும்.

தேங்காய், மிளகாய் வத்தல், சீரகம், சோம்பு இவற்றை நன்றாக அரைக்கவும்.

இதை வதக்கிய வெங்காயம், தக்காளியுடன் ஊற்றி நன்றாக வதக்கி வெந்த துவரம் பருப்பு போட்டு நன்றாக கொதி வந்த இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: