ஸ்பெஷல் தேங்காய் சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் - அரை மூடி
பொட்டுக் கடலை - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பூண்டு பல் - 1
சி. வெங்காயம் - 1
இஞ்சி - மிக சிறிய துண்டு
கடுகு + உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காயை துருவி, அந்த துருவலுடன் பொட்டுக் கடலை, ப. மிளகாய், இஞ்சி, சி. வெங்காயம், பூண்டுப் பல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை கொட்டி அரை டம்ளர் தண்ணிர் ஊற்றி நன்கு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு சட்னியில் கொட்டி இறுக மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்துத் திறந்து பரிமாறவும்.