வேர்க்கடலை சட்னி (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காய்ந்த வேக்கடலை - 1 கப்

பச்சை மிளகாய் - 3

புளி - சிறிய துண்டு

கடுகு - 1/2 தேக்கரண்டி

கருவேப்பில்லை - 4 இலை

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் வேக்கடலையை போட்டு 2 - 3 நிமிடம் வறுக்கவும்.

பின்பு வறுத்த வேர்க்கடலை ஆறவைத்து தோலினை உரித்து கொள்ளவும்.

பின் தோல் நீக்கிய வேர்க்கடலை, புளி, பச்சை மிளகாய் மற்றும் உப்புடன் 1 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

கடுகு, கறிவேப்பில்லை எண்ணெயில் தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையில் கொட்டவும்.

தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இப்பொழுது சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி.

குறிப்புகள்:

இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்