வெள்ளை சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உலர்ந்த தேங்காய் துருவல் - ஒரு கோப்பை

கடலைப்பருப்பு - கால் கோப்பை

பச்சைமிளகாய் - நான்கு

புளி - ஒரு கொட்டைபாக்களவு

இஞ்சி - அரைத்துண்டு

கொத்தமல்லி - ஒரு பிடி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்புத்தூள் - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

காய்ந்தமிளகாய் - 1

செய்முறை:

உலர்ந்த தேங்காய் துருவலை சுடுதண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

கடலைப்பருப்பை வெறும் சட்டியில் போட்டு சிவக்க வறுக்கவும். இதில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து இதையும் ஒரு மணி நேரம் தனியாக ஊறவைக்கவும்.

பிறகு முதலில் தேங்காயை ஊறிய நீருடன் சேர்த்து அரவை இயந்திரத்தில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஊறிய கடலைப்பருப்பின் நீரை வடித்து விட்டு தேங்காயுடன் சேர்க்கவும். தொடர்ந்து பச்சைமிளகாய், இஞ்சி, புளி, உப்பு, கறிவேப்பிலையில் பாதியைப் போட்டு கொத்தமல்லியையும் போட்டு அரைக்கவும்.

கெட்டியாகவோ அல்லது நீர்த்தோ தேவைக்கேற்ப சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து அரைக்கவும். தேவையான பதம் வந்தவுடன் வழித்து வைத்துக் குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும்.

தேவைப்படும் பொழுது மட்டும் வெளியே எடுத்து கடுகை தாளித்து மேலாக ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: