வெங்காய சட்னி (6)
0
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 5
தக்காளி - 3
காய்ந்த மிளகாய் - 8
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயம், தக்காளி, மிளகாய், புளி, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்தவற்றை ஊற்றி, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.