வெங்காய சட்னி (5)
0
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 5
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக வதக்க வேண்டும்.
ஆறியபின் வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவேண்டும். கடைசியாக தக்காளி சேர்த்து ஒரு சுத்து சுத்தவும்.
மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
குறிப்புகள்:
இட்லி தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.