வெங்காய சட்னி (11)





தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - 1
இஞ்சி - 1 இன்ச்
கருவேப்பிலை - 3 ஆர்க்கு
கொத்துமல்லி தழை - 1 கப்
கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிது
எண்ணெய் - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், இஞ்சி, கருவேப்பிலை இலைகள் போட்டு வதக்கவும்.
வெங்காயத்தை உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
காய்ந்த மிளகாயை வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்.
சூடாகவே மிக்சியில் கொட்டி, கொதமல்லி தழையை பச்சையாகவே சேர்த்து அரைக்கவும்.
கடுகு, உளுதம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து சட்டினியில் சேர்க்கவும்.