வெங்காய கார சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 1/4 கிலோ

காய்ந்த மிளகாய் – 10

பூண்டு – 2 பல்

புளி – சிறிதளவு

கடுகு – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 5 இலை

பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயத்தினை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தினை சிறிது நேரம் ஆற வைக்கவும். அதன் பிறகு மிக்ஸியில் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அதில் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

இதனை அரைத்து வைத்துள்ள வெங்காயத்துடன் சேர்த்து கிளறி விடவும்.

சுவையான வெங்காய கார சட்னி ரெடி.

குறிப்புகள்:

இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.