வெங்காயம் கார சட்னி
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 2 பல்
புளி - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 5 இலை
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தினை தோல் உரித்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
பின அதே கடாயில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயத்தினை போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயத்தினை சிறிது நேரம் ஆறவிடவும்.
அதன் பின் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
ஒர் பனில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு சேர்த்து தாளித்து பின் அதில் கருவேப்பில்லை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
இதனை அரைத்து வைத்துள்ள வெங்காயத்துடன் சேர்த்து கிளறவும்.
சுவையான வெங்காயம் கார சட்னி ரெடி.