வாழைக்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 3
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
தேங்காய்ப்பூ - அரை மூடி
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
தேசிக்காய் - பாதி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
வாழைக்காயை தோல் நீக்கி இரண்டாக வெட்டவும்.
வெங்காயத்தினையும் பச்சை மிளகாயையும், கறிவேப்பிலையினையும் சின்ன சின்னதாக வெட்டவும்.
வெட்டிவைத்த வாழைக்காயினுள் மஞ்சள், சிறிதளவு உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு அவிக்கவும்.
அவிந்ததும் தண்ணீரை வடித்து எடுத்து வாழைக்காயை நன்றாக குழிக்கரண்டியால் மசிக்கவும்.
பின்பு அதனுள் மிளகு, தேங்காய்ப் பூ, அரிந்து வைத்த பச்சை மிளகாயையும், அரைவாசி வெங்காயத்தினையும் சேர்க்கவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு கொதித்தவுடன், சோம்பு, கடுகு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின்பு அதனுள் மீதம் உள்ள வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.
கடைசியாக இரண்டினையும் ஒன்றாக சேர்த்து கலந்து தேசிப்புளி விட்டு பரிமாறவும்.