வால்நட் டேட்ஸ் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வால்நட் - 4

டேட்ஸ் - 100 கிராம்

மிண்ட் (புதினா) - ஒரு கட்டு

இஞ்சி - ஒரு இன்ச் அளவு

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

வறுத்து திரித்த சீரகம் - 1 தேக்கரண்டி

வினிகர் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வால்நட்டை தோலுரித்து வைக்கவும்.

டேட்ஸை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து விதையை நீக்கவும்.

புதினாவை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவவும்.

முதலில் மிக்ஸியில் இஞ்சி, பொடித்த சீரகம், மிளகாய் தூள் சேர்த்து அரைக்கவும்.

அடுத்து டேட்ஸ், வால்நட், புதினா மூன்றையும் சேர்த்து அரைக்கவும்.

சுவையான வால்நட் டேட்ஸ் மிண்ட் சட்னி ரெடி.

குறிப்புகள்:

இந்த சட்னியை ப்ரெட்டில் ஜாம் போல வைத்து சாப்பிடலாம்.

நோன்பு காலங்களில் பஜ்ஜி, போண்டா, வடைக்கு தொட்டுக்கொள்ள ஆரோக்கியமான சட்னி.

சுவையான இனிப்பு, புளிப்பு, காரம், புதினா மணத்துடன் அருமையான சட்னி.

கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சத்தான சட்னி இது.