ரெட் கேப்சிகம் சட்னி
தேவையான பொருட்கள்:
ரெட் காப்சிகம் - 1
வேர்கடலை - ஒரு கைப்பிடி
வர மிளகாய் - 2
புளி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ரெட் கேப்சிகமை சிறு சிறுத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையை ஆற வைத்து பின்னர் தோல் எடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கேப்சிகமை இரண்டு நிமிடம் வறுத்து இறக்கும் முன் புளி மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.
ஆற வைத்த கலவையுடன் வேர்க்கடலை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.( தண்ணீர் விடாமல்)
பின்பு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவையில் கொட்டவும்.
சுவையான ரெட் கேப்சிகம் சட்னி தயார்.
குறிப்புகள்:
இதை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். ப்ரெட்டில் தடவியும் சாப்பிடலாம்.