யுகாதிச் சட்னி
0
தேவையான பொருட்கள்:
கருப்பட்டி - 200 கிராம்
புளி - 200 கிராம்
மாங்காய் - 1
வேப்பம் பூ - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கருப்பட்டியைத் தூளாக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து ஒரு டம்ளர் அளவிற்கு கெட்டியான கரைசலாக எடுத்துக் கொள்ளவும்.
மாங்காயினைத் தோல் நீக்கி சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கருப்பட்டி, புளிக்கரைசல், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
குறிப்புகள்:
இது ஆந்திராவின் புதுவருடப்பிறப்பான யுகாதி அன்று தயாரிக்கப்படும் சிறப்புச் சட்னி ஆகும்.