மைக்ரோவேவ் தக்காளி க்ரீன் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2

வெங்காயம் - 1

பூண்டு - 1

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

புதினா இலைகள் - ஒரு கீற்று,

கறிவேப்பிலை - ஒரு கீற்று

தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1 தேக்கரண்டி

புளி - சிறுதுண்டு

நல்லெண்ணெய் - வதக்குவதற்கு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம்பருப்பு, சீரகம் இரண்டையும் போட்டு கலக்கி மைக்ரோ-ஹையில் ஒன்றரை நிமிடம் வைக்கவும். அது சிவந்து வறுபட்டிருக்கும்.

பின் அதை எடுத்து தனியே வைத்துவிட்டு, அதே பாத்திரத்தில், பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை மற்றும் தேங்காயை போட்டு கலக்கி ஒரு நிமிடம் மைக்ரோ ஹையில் வைக்கவும்.

பின் அதை எடுத்து விட்டு அதில் வெங்காயம் போட்டு 2 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வைக்கவும். (பொன்னிறமாகும் வரை)

பின் அதை எடுத்து விட்டு அதே பாத்திரத்தில் தக்காளியை போட்டு மைக்ரோ ஹையில் 2 நிமிடங்கள் வைக்கவும்.

பின் வதக்கிய எல்லாவற்றுடன் புளி சேர்த்து அரைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.(தாளிப்பதற்கு ஒரு நிமிடம் மைக்ரோஹையில் வைக்கவும்)

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்:

இந்த சட்னி இட்லி, தோசை மற்றும் தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்