முள்ளங்கி சட்னி (3)
0
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 1/2 கிலோ
வெங்காயம் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
கருவேப்பில்லை - 5 இலை
கடுகு - தாளிக்க
எண்ணெய் – சிறிது
செய்முறை:
முதலில் முள்ளங்கியை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பின்னர் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கொள்ளவும்.
முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். அனைத்தும் வெந்தவுடன் மிக்ஸியில் இட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், கருவேப்பில்லை போட்டு வதக்கவும்.
இத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டிக் கிளறவும். இப்பொழுது சுவையான சட்னி ரெடி.
குறிப்புகள்:
இதனை இட்லி, தோசை, சப்பாதியுடன் பரிமாறலாம்.