முள்ளங்கி சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி -1

பெரியவெங்காயம் -1

காய்ந்தமிளகாய் -1

தனியா -1/2 தேக்கரண்டி

சீரகம், மிளகு -1/4 தேக்கரண்டி

இஞ்சி - சிறிது

பூண்டு - 4 பல்

தேங்காய் துறுவல் - 1/4 கப்

புளி - சிறிதளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு -தேவையன அளவு

செய்முறை:

முள்ளங்கியை தோல்நீக்கி பொடியாக நறுக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணய் விட்டு முள்ளங்கியை போட்டு பச்சைவாசனை போக நன்கு வதக்கி தனியாக எடுத்துவைக்கவும்.

அதே வாணலியில் மீதி எண்ணய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தனியா, மிளகாய், சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

வதக்கிய முள்ளங்கி, புளி,தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி ஆறவைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: