முள்ளங்கி சட்னி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 1

பெரிய வெங்காயம் - 1/2

தேங்காய் துருவல் - 1 கப்

புளி - ஒரு பூண்டின் அளவு

இஞ்சி - ஒரு வில்லை

பூண்டு - 4 பல்

தாளிக்க:

எண்ணெய் - தேவைக்கு

கடலை, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

மல்லி விதை - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

வரமிளகாய் - 3

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

தாளித்து ஊற்ற:

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - தேவைக்கு

செய்முறை:

வெங்காயத்தையும், முள்ளங்கியையும் நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிறிது உப்பு சேர்த்து முள்ளங்கியை வதக்கவும்.

பின் தாளிக்க கொடுத்தவற்றை ஒன்றன் பின் ஓன்றாக போட்டு தாளிக்கவும்.

பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து ஒன்று சேர வதக்கவும்.

ஆறியதும் தேங்காய், இஞ்சி, பூண்டு மற்றும் புளி சேர்த்து சிறிது நீர் விட்டு அரைக்கவும்.

கடைசியாக சட்னியில், கடுகு மற்றும் கறிவேப்பிலையை நல்லெண்ணெயில் தாளித்து ஊற்றவும். உப்பை சரி பார்த்துக் கொள்ளவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: