முப்பருப்பு தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு -1 கைப்பிடி
உளுந்து - 1 கைபிடி
பாசிபருப்பு - 1/2 கைப்பிடி
தக்காளி (நான்கு நான்கு துண்டுகளாக நறுக்கவும்) - 4
வெங்காயம் - 2
கொத்தமல்லி - 1 கைப்பிடி
பட்ட மிளகாய் - 2
வெள்ளை பூடு - 8 பல்
தேங்காய் - 1 சில்லு (அல்லது சிறிதளவு)
எண்ணெய் - 2 மேசைகரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் -1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மூன்று பருப்புக்களையும் போடவும்.
அதில் தேங்காய், வெள்ளை பூடு, பட்ட மிளகாய் சேர்க்கவும்.
நன்கு பொரிந்து பருப்புக்கள் சிவந்ததும் தனியாக எடுத்து ஆறவைக்கவும்.
அந்த எண்ணெயிலேயே வெங்காயம் வதக்கவும். பொன்னிறமானதும் கொத்தமல்லி, தக்காளி சேர்த்து அதிக தீயிலேயே கிளறவும். வெந்ததும் ஆற வைக்கவும்.
ஆறியதும் உப்பு சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து அரைக்கவும்.
தாளிக்க கொடுத்தவற்றை சிறிதளவு எண்ணெயில் தாளித்து அதில் சேர்க்கவும்.