முத்தலை சட்னி
0
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லித்தழை - 1 கப்
புதினா - 1 கப்
கறிவேப்பிலை - 1 கப்
தக்காளி - 2
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1/2 கப்
வரமிளகாய் (காரத்திற்கேற்ப) - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிது
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, வரமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கொத்தமல்லி தழை, புதினா, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் அரை கப் ஊற்றி நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் சேர்க்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும்.
பின் வதக்கிய அதே கடாயில் எண்ணெய், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் அரைத்த சட்னி சேர்த்து உடனே அடுப்பை நிறுத்தி விடவும்.
சுவையான சட்னி தயார்.