முட்டைகோஸ் சட்னி (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை கோஸ் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 1

தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

புளி - சிறிது

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு கோஸ் சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும்.

இப்பொழுது தக்காளி, தேங்காய், புளி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்:

இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்