முட்டைகோஸ் சட்னி (2)
தேவையான பொருட்கள்:
கழுவி நறுக்கிய முட்டை கோஸ் - 1/4 கிலோ
உளுந்து - 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
தேங்காய் - 1/4 மூடி
கறிவேப்பிலை - 1 இனுக்கு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இனுக்கு
வெங்காயம் (தாளிக்க பொடியாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 3
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் 1/4 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி முட்டைகோசை வதக்கி எடுக்கவும்.
அதே வாணலியில் உளுந்தை வறுத்து எடுக்கவும்.
பின் பச்சைமிளகாய், வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
ஆறியபின் எல்லாவற்றையும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை போட்டு நன்கு வதக்கி பின் அரைத்த சட்னியை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறலாம்.
குறிப்புகள்:
தோசைக்கு நன்றாக இருக்கும்.