முட்டைகோஸ் சட்னி
0
தேவையான பொருட்கள்:
நறுக்கிய முட்டைகோஸ் - 1/2 கப்
புதினா - 1/4 கப்
உளுந்து, கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு, சீரகம், பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பானில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
பின்பு முட்டை கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
புதினா இலைகளை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஆற வைத்து அரைக்கவும்.
பின்பு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து சேர்க்கவும். எளிமையாக செய்யக்கூடிய முட்டை கோஸ் சட்னி தயார்.