மிளகாய் சட்னி (2)
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வர மிளகாய் - 10
வெங்காயம் - 1
புளி - எலுமிச்சையளவு
பூண்டு - 3
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
வெங்காயத்தை பெரிதாக அரிந்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய், பூண்டு, புளி, உப்பு எல்லாவற்றையும் அம்மியில் அல்லது மிக்ஸியில் ஒன்றுக்கு இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையை போட்டு அரைத்தவற்றில் கொட்டவும்.