மாவு சட்னி (1)
தேவையான பொருட்கள்:
வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கப்
தக்காளி (நறுக்கியது) - 3/4 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இனுக்கு
சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி
இட்லி மாவு - 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு , கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி தக்காளி போடவும்.
நன்றாக பேஸ்ட் போல் வதக்கவும்.
இதனுடன் சாம்பார் பொடி,உப்பு போட்டு , 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
பின் இட்லி மாவுடன் சிறிது நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
அதை கொதிக்கும் சட்னியில் ஊற்றவும். கட்டியானால் இன்னும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
இறக்கும் தருவாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு கலக்கு கலக்கவும்.