மாங்காய் சட்னி (2)
தேவையான பொருட்கள்:
முற்றிய பெரிய மாங்காய் - 2
வினிகர் - 200 மில்லி லிட்டர்
காய்ந்த மிளகாய் - 5
ஒரு துண்டு இஞ்சி - 1 அல்லது 1/2 செ.மீ
பூண்டு - 3 பற்கள்
சர்க்கரை - 1 அல்லது 1/2 மேசைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
மாங்காயின் தோலை சீவி கழுவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கிரைண்டரில் (மிக்ஸியில்) போடவும். தோலை சீவி கழுவி வெட்டிய மாங்காயுடன் வினிகரை சேர்த்து அரைக்கவும்.
அரைத்தவற்றை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். கிரைண்டரில் (மிக்ஸியில்) செத்தல் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, வினிகர் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
அரைத்தவற்றை இன்னொரு தட்டில் எடுத்து வைக்கவும். அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கி அதில் அரைத்த மாங்காய், அரைத்த மிளகாய் இஞ்சி, பூண்டு கலவை, சர்க்கரை, உப்பு, வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சவும்.
அடுப்பில் உள்ள கலவை கொதித்து கூழ்பதமாக வரும் போது இக்கலவையை அடுப்பிலிருந்து இறக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கிய கலவையை ஆறவிடவும். இக்கலவையை ஓரளவு சூட்டுடன் தொற்றுநீக்கிய போத்தலில் போட்டு இறுக்கி மூடி வைக்கவும். சுவையான சட்னி ரெடி.