மாங்காய் சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
புளிப்பான சிறிய மாங்காய் - 1
துருவிய தேங்காப்பூ - ஒரு மூடி
பச்சை மிளகாய் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
மிளகா வத்தல் 2
பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாங்காயை நன்கு கழுவி, தோல் சீவி மிருதுவாகத் துருவிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி,கடுகு, பருப்பு, மிளகாவத்தல் சிவக்க வறுக்கவும்.
இத்துடன் தேங்கா பூ, மிளகாய் மாங்கா துருவல் பெருங்காயம் சேர்க்கவும்.
உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும். சுவையான சட்னி ரெடி.