மாங்காய் சட்னி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1/2 மூடி

மாங்காய் - 4 துண்டுகள்

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 3 (அல்லது) 4

எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். தேங்காய் மற்றும் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (அல்லது) துருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காயுடன் மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்புச் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான மாங்காய் சட்னி தயார்.

குறிப்புகள்:

மாங்காயை அதன் புளிப்புத் தன்மைக்கேற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்க்கலாம். பார்ப்பதற்கு தேங்காய் சட்னி போன்றே இருக்கும். பச்சை மாங்காயின் மணத்துடன் சுவையாக இருக்கும்.