மல்லிச் சட்னி
0
தேவையான பொருட்கள்:
மல்லித் தழை - ஒரு கட்டு
பெரிய வெங்காயம் - 2
வர மிளகாய் - 2
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 2 பல்
தேங்காய் - 2 துண்டு
கறிவேப்பிலை - 2 இணுக்கு
கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
மல்லித் தழையை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் பெரிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி, வர மிளகாய், மல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் ஆறவிட்டு புளி, தேங்காய், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
சுவையான மல்லிச் சட்னி ரெடி.