மல்ட்டிதால் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

நிலக்கடலை - 1 தேக்கரண்டி

வரமிளகாய் - 4

தேங்காய் துருவல் - 1 கப்

தக்காளி - 1

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 10

மல்லி விதை - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1 சிறு துண்டு

புளி - சிறிதளவு

கடுகு, உ. பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணை விட்டு வரமிளகாய், மல்லி விதை, நிலக்கடலை, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு பெருங்காயம் இவற்

றை ஒன்று ஒன்றாக வறுத்து வைக்கவும்.

பின் பூண்டு, வெங்காயம், தக்காளி தேங்காய் துருவல் இவற்றை வதக்கிக் கொள்ளவும்

ஆறியதும் உப்பு, புளி சேர்த்து அரைத்தெடுக்கவும். கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

குறிப்புகள்:

இட்லி தோசைக்கு நல்ல காம்பினேஷன்.