மசாலா தீயல்
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - அரை கப்
சின்ன வெங்காயம் - 5
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி (காரத்திற்கேற்ப)
மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 1/2தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் 1/2 மேசைக்கரண்டி எண்ணெய் சூடாக்கி ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து 30 நொடிகள் வதக்கி தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துருவல் இளஞ்சிவப்பாகி வாசனை வரும் வரை கிளறிக் கொண்டிருக்கவும்.
இப்போது தீயைக் குறைத்து மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து 5 நொடிகள் வதக்கி அடுப்பை அணைத்து விடவும். வாணலியின் சூட்டிலேயே பொடிகள் வறுப்பட்டு விடும்.
சூடு ஆறியதும் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு கடுகு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் 1 1/2கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.
5 நிமிடம் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.