பொரிகடலை சட்னி
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தேங்காய் - ஒரு மூடி
பச்சைமிளகாய் - 5
பொரிகடலை - 50 கிராம்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய் மூடியை கழுவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொரி கடலை, தேவையான உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றவும்.
கருவேப்பிலையுடன் வடகத் தூள் அல்லது வற்றல் கிள்ளிப் போட்டு பொரித்தால் வாசனையாக இருக்கும்.
சட்னியில் புளி சிறிது, வெங்காயம், பூண்டு சேர்த்தும் அரைக்கலாம்.