பொட்டுக்கடலை தேங்காய் சட்னி
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தேங்காய் - முக்கால் மூடி
பொட்டுக்கடலை - 1/2 கப்
பச்சைமிளகாய் - 6
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, உப்பு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டுத் தாளித்து இறக்கவும்.
பிறகு தாளித்தவற்றை அரைத்து வைத்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசை, போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம்.