பேச்சுலர் நிலக்கடலை சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நிலக்கடலை - 50 கிராம்

பூடு - 8 பல்

தேங்காய் - 3 சிறிய துண்டு

பட்ட மிளகாய் - 4

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

நிலக்கடலையை வெறும் சட்டியில் வறுத்து தோலுரித்துக் கொள்ளவும்.

அதனுடன் பூடு, தேங்காய், பட்ட மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.

தாளித்தவற்றை அரைத்த விழுதில் சேர்க்கவும். சுலபமாக செய்யக்கூடிய நிலக்கடலை சட்னி தயார்.

குறிப்புகள்: