பூண்டு மிளகாய் சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 15
பூண்டு - 5 பல்
புளி - மிளகு அளவு
தண்ணீர் - 50 மி.லி.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியை அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் சூடாக்கி அடுப்பை அணைக்கவும்.
அந்த சூட்டிலேயே மிளகாயை நன்றாக வதக்கவும்.
மிக்சியில் மிளகாயை அரைக்கும்போது, நன்றாக பவுடர் போல அரைக்க, இப்படி மிளகாயை சிறிது சூடுபடுத்தினால் அம்மியில் அரைத்த மிளகாய் சட்னியைப் போன்று இருக்கும்.
மிக்சியில் மிளகாயைப் போட்டு நன்றாக அரைக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி 30 வினாடிகள் அரைக்கவும்.
பூண்டு, உப்பு, புளி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அரைக்கவும்.
சுவையான சட்னி ரெடி
குறிப்புகள்:
மிகவும் காரமான சட்னியாக இருப்பதால் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொண்டு சாப்பிடலாம்.