பூண்டு சட்னி (6)
0
தேவையான பொருட்கள்:
பூண்டு - 150 கிராம்
வரமிளகாய் - 10 அல்லது 15 காரத்திற்கு ஏற்ப
புளி - கோலி அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். மற்றவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அடுத்து பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளி மூன்றையும் நன்றாக பொடிக்கவும். பின் வதக்கிய பூண்டை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சுவையான பூண்டு சட்னி ரெடி.
குறிப்புகள்:
இட்லி, தோசைக்கு ஏற்ற காம்பினேஷன்.