பூண்டு சட்னி (5)
0
தேவையான பொருட்கள்:
முற்றிய தேங்காய் - ஒரு கப்
பூண்டு - 10 அல்லது 15 பல்
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சம்பழ அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை பூப்போல துருவி வறுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய், மிளகாய்ப்பொடி, பூண்டு, புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்தவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
தேவையானால் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு வறுத்து விட்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.