புதினா மல்லி சட்னி (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2
தக்காளி - 2
தேங்காய் துருவியது - 1/4 கப்
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - கால் கட்டு
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புதினா மற்றும் மல்லி தழைகளை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும் .
தேவையான பொருட்கள் அனைத்தையும் வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஆற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். புதினா மல்லி சட்னி தயார்.
குறிப்புகள்:
இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.