புதினா மல்லி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - கைப்பிடி

கறிவேப்பிலை - 15 இதழ்

மல்லித் தழை - அரை கட்டு

பெரிய வெங்காயம் - பாதி

தக்காளி - 1

தேங்காய் - ஒரு பெரிய துண்டு

கடலை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வேர்கடலை - 2 தேக்கரண்டி

வரமிளகாய் - 2

கடுகு - சிறிது

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை முதலில் எடுத்துக் கொள்ளவும்

ஒரு சிறிய வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் பருப்பு வகைகளை போட்டு சிவக்க வறுக்கவும்.

அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

தக்காளியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

பின்னர் புதினா மற்றும் மல்லித் தழையை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.

நன்கு ஆறியப் பின் இந்த கலவையை மிக்ஸியில் நீர் சேர்க்காமல் அரைக்கவும். நைஸாக அரைக்க வேண்டாம்.

குறிப்புகள்:

புதினா மற்றும் மல்லித் தழையை வதக்க கூடாது.

சட்டியில் போட்டதும் கிளறி அடுப்பை அணைக்கவும்.