புதினா சட்னி (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - ஒரு கட்டு

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 5

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புதினாவை நன்கு சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். பிறகு பச்சை மிளகாயை வதக்கவும்.

புதினா இலையை சிறிதளவுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தனியாக வதக்கவும். அதன் பின்னர் தக்காளியை தனியாக வதக்கவும்.

எல்லாம் ஆறியபின் பருப்பு, மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.

அதன் பின் புதினா சேர்த்து அரைக்கவும். கடைசியாக தக்காளி சேர்த்து அரைக்கவும்.

குறிப்புகள்: