புதினா சட்னி (4)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புதினா - 1 கட்டு

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

புளி - 1 கோலி அளவு

மிளகாய் வத்தல் - 3 அல்லது காரத்திற்கேற்ப

தேங்காய் - 1 பத்தை

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 1/4 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி உளுந்தை தனியாக சிவப்பாக வறுக்கவும்.

பின் வத்தல், புளியை தனியாக வறுக்கவும்.

வெறும் வாணலியில் புதினாவை ஒரு வதக்கு வதக்கவும்.

அனைத்து பொருட்களுடன் உப்பு சேர்த்து அரைக்கவும்.

பின் தாளித்து கொட்டி பரிமாறவும். புதினா சட்னி ரெடி.

குறிப்புகள்: