புதினா சட்னி (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - ஒரு சிறு கட்டு

சிறிய வெங்காயம் - 6

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - சிறு துண்டு

புளி - சிறிது

உலர்ந்த மாதுளை விதை - ஒரு தேக்கரண்டி

கடுகு - சிறிது

எண்ணெய் - தாளிப்புக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் புதினா இலையை கழுவி அத்துடன் எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து அரைத்துவைத்த சட்னியுடன் சேர்த்து கலக்கவும்.

குறிப்புகள்: