புதினா சட்னி (1)
தேவையான பொருட்கள்:
புதினா - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 2
கொத்தமல்லி விதை -1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - சிறு துண்டு
தேங்காய் துருவல் - 1/4 கப்
பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
புளி - கொட்டைபாக்கு அளவு
எண்ணை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புதினாவை ஆய்ந்து தண்ணீரில் நன்கு கழுவி வைக்கவும்.
சின்னவெங்காயத்தை தோலுரித்துவைக்கவும்.
இஞ்சி, பூண்டை சுத்தம் செய்யவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.அதில் கொத்தமல்லி, சீரகம், மிளகு, மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.
புதினாவை போட்டு நன்கு வாசம் வரும்வரை வதக்கவும்.அத்துடன் தேங்காய்துருவல், பொட்டுகடலை புளி, உப்பு போட்டு வதக்கி ஆறவைக்கவும்.
நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.