புதினா சட்னி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வரமிளகாய் - 15

புதினா - ஒரு கட்டு

உளுத்தம்பருப்பு - 3 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

புளி - சிறிதளவு

கட்டி பெருங்காயம் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து அலசிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும்.

மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி புதினாவை நன்கு வதக்கவும்.

மிக்சியில் முதலில் மிளகாய், உப்பு, புளி சேர்த்து மசித்து அதில் புதினா இலையை சேர்த்து அரைத்து கடைசியில் பருப்பு வகையை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து போட்டால் சுவையான புதினா சட்னி தயார்.

குறிப்புகள்:

இந்த சட்னி இரண்டு நாட்களுக்கு கெட்டு போகாது.