புடலங்காய் சட்னி
0
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - சிறிது
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புடலங்காய் மற்றும் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறம் ஆனதும் வெங்காயம் மற்றும் புடலங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து, உப்பு சேர்த்து அரைக்கவும்
பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். சட்னியில் தாளித்தவற்றை சேர்த்து பரிமாறவும்.