பீர்க்கங்காய் சட்னி (2)
0
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 3
கருவேப்பிலை - 5 இலை
கடுகு – தாளிக்க
செய்முறை:
முதலில் பீர்க்கங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பின்னர் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வெட்டி கொள்ளவும் .
பீர்க்கங்காய், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். அனைத்தும் வெந்தவுடன் மிக்ஸியில் இட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
இத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டி கிளறவும்.
சுவையான சட்னி ரெடி.
குறிப்புகள்:
இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.