பீர்க்கங்காய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் - 1

வெங்காயம் - 1/2

சிறிய தக்காளி - 1

புளி - நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் - 6 அல்லது 7 (காரத்துக்கு ஏற்ப)

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - வதக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

உளுத்தம் பருப்பு நிறம் மாறியதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்க்கவும். பீர்க்கங்காயை கழுவி அதன் மேலுள்ள கூரிய தோலை சீவி, சிறு வில்லைகளாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும். பின்னர் புளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் எடுத்து ஆற வைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து, 2 நிமிடங்கள் வதக்கவும். பீர்க்கங்காய் சட்னி தயார்.

குறிப்புகள்:

சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம்.