தேங்காய் பூண்டு சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1/2 மூடி

பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பில்லை - 3 இலை

கடுகு - தாளிக்க

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேங்காயினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

பூண்டினை தோல் உரித்து கொள்ளவும்.

பின்பு மிக்ஸியில் தேங்காய், பூண்டு , உப்பு மற்றும் பச்சை மிளகாயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

எண்ணெய் காயவைத்து கடுகு , சீரகம், கறிவேப்பில்லையை தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையில் கொட்டவும்.

சுவையான தேங்காய் பூண்டு சட்னி ரெடி.

குறிப்புகள்:

இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.