தேங்காய் புதினா சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - 50 கிராம்

தேங்காய் - 4 மேசைக்கரண்டி

எள்ளு - 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 அல்லது 3

புளி - புளிக்கொட்டை அளவு

புளிக்காத கட்டி தயிர் - 1 மேசைக்கரண்டி (விருப்பப்பட்டால்)

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புதினாவை ஆய்ந்து கழுவி எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் எள்ளு போட்டு வெடிக்க விட்டு, மிளகாய், புதினா, தேங்காய், உப்பு, புளி சேர்த்து சிறிது நேரம் குறைந்த தீயில் வதக்கவும்.

வதக்கியதை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்,விருப்பப்பட்டால் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்.

குறிப்புகள்: