தேங்காய் சட்னி (13)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - முக்கால் மூடி

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 5

பெருங்காயம் - புளியங்கொட்டை அளவு

புளி - சிறிது

கடுகு - அரை தேக்கரண்டி

கருவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பெருங்காயத்தைப் போட்டுப் பொரிக்கவும்.

அதனுடன் உளுத்தம் பருப்பு, மிளகாய் போட்டுச் சிவந்ததும் புளியைப் போட்டு ஒரு முறை கிளறி இறக்கவும்.

வறுத்த சாமான்களுடன் தேங்காயை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றிக் கடுகு, கருவேப்பிலை தாளித்து அரைத்தவற்றை போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்தவுடன் இறக்கி அலங்கரிக்க சிறிது கருவேப்பிலை சேர்க்கலாம்.

குறிப்புகள்:

புளிப்பு சுவைக்கு சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.